அமெரிக்க அதிபர் தேர்தல். நேரடி விவாதத்திற்கு பின் ஏற்பட்ட திடீர் மாற்றம்
அமெரிக்க அதிபராக உள்ள ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் நவம்பர் 8ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவியுமான ஹிலாரி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளர் தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த சில மாதங்களாக இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வெற்றி பெறுவது யார் என்பது தொடர்பாக கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்றன.
இதுவரை வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ஹிலாரி கிளிண்டனே வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சமீபத்தில் நடந்த நேரடி விவாதத்திற்கு பின்னர் டொனாட்ல் டிரம்புக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
நேரடி விவாதத்திற்கு பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஹிலாரி கிளிண்டனுக்கு 43 சதவீதமும், டிரம்புக்கு 38 சதவீதமும் வாக்கு கிடைத்துள்ளது. இருவருக்கும் இடையே வெறும் 5 சதவீதம் மட்டுமே வித்தியாசம் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.