முழுநேரப் பேராசிரியரை மட்டுமே ஆராய்ச்சி கண்காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும்:யுஜிசி அறிவுறுத்தல்

images (18)

ஆராய்ச்சி கண்காணிப்பாளர்களாக முழுநேரப் பேராசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என, பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: யுஜிசி வழிகாட்டுதல் 2009-இன் படி, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆராய்ச்சி கண்காணிப்பாளராக முழுநேர பேராசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். ஆனால், சில பல்கலைக்கழகங்கள் பகுதி நேரப் பேராசிரியர்கள், வருகைப் பேராசிரியர்களை ஆராய்ச்சிக் கண்காணிப்பாளர்களாக நியமித்திருப்பது யுஜிசி-யின் கவனத்துக்கு வந்துள்ளது. அவ்வாறு விதிகளை மீறும் பல்கலைக்கழகங்கள் மீது யுஜிசி சட்டம் 1956-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் அந்தப் பல்கலைக்கழகத்தின் பெயரும் யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்படும் என எச்சரித்துள்ளது.

Leave a Reply