நிலச்சரிவு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்.

ooty_train_medகடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் இன்று மீண்டும் இயக்கப்பட்டது.

கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, குன்னூர் அருகே கல்லாறு என்ற பகுதியில் உள்ள ரயில் பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பணி நடைபெற்றதன் காரணமாக, சில நாட்களாக ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த பணி தற்போது முடிவடைந்ததை தொடர்ந்து, இன்று காலை முதல் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே இயக்கப்பட்டு வரும் ஊட்டி மலை ரயில்  மீண்டும் இயக்கப்பட்டது.

காலை 7.10 மணிக்கு 120 பயணிகளுடன் மலை ரயில்,மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு புறப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த மலை ரயிலில் பயணம் செய்தனர்.

Leave a Reply