அர்ஜெண்டினாவின் முன்னாள் சர்வாதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

அர்ஜெண்டினாவின் முன்னாள் சர்வாதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை
arjentina
அர்ஜென்டினா நாட்டின் கடைசி சர்வாதிகாரி ரினால்டோ பிக்னன் என்பவர் கடந்த 1970-ம் ஆண்டுகளில் அதிபராக பதவி வகித்தார். அப்போது இவருக்கு எதிராக போராடிய நூற்றுக்கணக்கான இடதுசாரிகளை ‘கழுகு வேட்டை’ என்ற ரகசிய நடவடிக்கையின் பேரில் கொன்று குவித்தார். மேலும் ஏராளமானவர்கள் உருகுவே, பிரேசில், சிலி, பராகுவே, மற்றும் பொலிவியாவுக்கு கடத்தப்பட்டு அங்கு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அர்ஜெண்டினாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து சர்வாதிகாரி ரினால்டோ பிக்னன் மற்றும் 4 ராணுவ தளபதிகள் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கி நடந்தது.

இந்த வழக்கின் விசாரணை சுமார் 3 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு, சர்வாதிகாரி ரினால்டோ பிக்னனுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. உருகுவே நாட்டின் முன்னாள் தளபதி மானுவல் கார்டெரோவுக்கு 25 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. அர்ஜென்டினாவின் ராணுவ தளபதி ஜார்ஜ் ரபேல் விடெலா விசாரணையின் போது மரணம் அடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply