காசு கொடுத்து வாங்கப்படுகிறதா கருத்துக்கணிப்புகள்? உ.பி.அமைச்சர் குற்றச்சாட்டு

காசு கொடுத்து வாங்கப்படுகிறதா கருத்துக்கணிப்புகள்? உ.பி.அமைச்சர் குற்றச்சாட்டு
azamkhan
தேர்தல் திருவிழா வந்துவிட்டால் பத்திரிகையாளர்கள் பிசியாக இருக்கின்றார்களோ இல்லையோ கருத்துக்கணிப்பு எடுப்பவர்கள் பிசியாகிவிடுவார்கள். ஆரம்பகாலத்தில் நேர்மையாக எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு தற்போது முழுக்க முழுக்க வியாபாரமாக மாறிவிட்டதாகவே கூறப்படுகிறது.

கருத்துக்கணிப்பின் முடிவுகள் மக்களின் மனமாற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்துவிடுவதால் ஒருசில கட்சிகள் கருத்துக்கணிப்பு எடுப்பவர்களிடம் காசு கொடுத்து தங்களுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு முடிவை வெளியிடுவதாக கடந்த சில ஆண்டுகளாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ஆஸம் கான் இதுகுறித்து குறியபோது ”கருத்துக் கணிப்புகள் பணம் கொடுத்து வெளியிடப்படுபவை. யார் பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்குச் சாதகமாக கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படும். கருத்துக்கணிப்புகளை மக்கள் நம்ப வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.

Chennai Today news: opinion polls all about money power said UP minister

Leave a Reply