ஜனநாயக படுகொலையை தட்டிக்கேட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்வதா? என அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகளை மாற்றி அறிவிக்க திமுக முயற்சிப்பதன் வெளிப்பாடாகவே ஜெயக்குமார் கைது என ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
இத்தனை ஆண்டுகளாகியும் கூட திமுக தனது ஜனநாயக விரோத செயல்களை கைவிடாதிருப்பது கண்டிக்கதக்கது எனவும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வீடு புகுந்து எனது தந்தையை போலீசார் பலவந்தமாக இழுத்து சென்றுள்ளனர் என்றும், கைது பற்றி எந்த விவரமும் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றும் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் குற்றச்சாட்டியுள்ளார்.