ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவி: இணைகிறது இரு அணிகள்
அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன்படி ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதலமைச்சர் பதவி தர எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சம்மதித்துள்ளதாகவும், இதன்படி விரைவில் அதிகாரபூர்வமாக இரு அணிகளும் இணைக்கும் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஓபிஎஸ் தரப்பில் இரண்டு பேர்களுக்கு முக்கிய அமைச்சர் பதவிகளையும் வழங்கவும் ஈபிஎஸ் தரப்பில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இரு அணிகளும் இணையாவிட்டால் அதிமுகவை தினகரன் அணி கபளீகரம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் வேறு வழியின்றி இரு அணிகளும் இணைய சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்குள் தினகரன் நுழைவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.