இன்று மாலை இரு அணிகள் இணைகிறதா? ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தி வந்த இரண்டு அம்சங்களையும் நேற்று நிறைவேற்றும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கை இருந்ததால் இரு அணிகளும் இணையும் நாள் நெருங்கிவிட்டதாகவே அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை ஓபிஎஸ் அவர்கள் தனது ஆதரவாளர்களிடம் முக்கிய ஆலோசனை செய்யவுள்ளர. இந்த ஆலோசனைக்கு பின்னர் அவர் அதிகார்பூர்வமாக இரு அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கான பதவிகள் குறித்த பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதகாவும், இதுகுறித்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விபரங்களை வெளியிடுவார்கள் என்றும் கருதப்படுகிறது.