மக்கள் விரும்பினால் தாராளமாக சசிகலா முதல்வராகட்டும். ஓபிஎஸ்
தமிழக அரசியல் கடந்த சில நாட்களாக உச்சக்கட்டத்தில் இருக்கின்றது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற சொல்லிற்கேற்ப ஓபிஎஸ் அவர்களின் அதிரடியால் சசிகலா கதிகலங்கி உள்ளார். ஜெயலலிதாவையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சசிகலாவால் ஓபிஎஸ் அவர்களை சமாளிக்க முடியவில்லை
இந்நிலையில் நேற்று தொலைக்காட்சியில் பேட்டி அளித்த சசிகலா, ‘இத்தனை ஆண்டுகாலம் அம்மாவைப் பார்த்துக்கொண்டேன். அவரது மறைவின் போது நான் அனுபவித்த வேதனை எனக்கு மட்டும் தான் தெரியும்.
மேலும் 100% நான் தான் தமிழக முதல்வராக பதவியேற்பேன். என்னிடம் நன்றாக பேசிக்கொண்டே ஓபிஎஸ் துரோகம் செய்துள்ளார் என பேட்டியளித்துள்ளார்.
இதற்கு கருத்து கூறிய ஓபிஎஸ் அவர்கள், ‘அம்மாவால் இதற்கு முன்பே அடையாளம் காணப்பட்டவன் நான். தமிழக முதல்வராக மக்கள் யாரை விரும்புகின்றனரோ அவர் தான் வரமுடியும். சசிகலாதான் முதல்வர் என மக்கள் விரும்பினால் தாராளமாக அவர் முதல்வராகட்டும்.
அதிமுக தலைமை மீண்டும் என்னை முதலமைச்சராக செயல்பட அழைத்தால், கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் பேசி அவர்களிடம் ஒப்புதல் பெற்றே, அவர்களின் ஒத்துழைப்புடன் பதவியை மீண்டும் ஏற்பதைப் பற்றி யோசிப்பேன்’ என்று கூறியுள்ளார்