ஜெயலலிதா மர்ம மரணத்திற்கு விசாரணை கோரி ஓபிஎஸ் இன்று உண்ணாவிரதம்

ஜெயலலிதா மர்ம மரணத்திற்கு விசாரணை கோரி ஓபிஎஸ் இன்று உண்ணாவிரதம்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறிக்கொண்டு வந்த நிலையில் திடீரென டிசம்பர் 4ஆம் தேதி உடல்நிலை மோசமானதாகவும், டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அதிமுகவின் ஒரு பிரிவின் தலைவரான ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் கேள்வி எழுப்பினார்.

மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை எழுப்பினார். இந்நிலையில் இந்த கோரிககியை வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தின ஸ்டேடியத்தில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருக்கின்றார். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தில் பி.எச்.பாண்டியன், பொன்னையன் உள்ளிட்ட பல மூத்த அதிமுக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

 

Leave a Reply