ஓ.பன்னீர்செல்வம் வீட்டுச்சிறையா? அதிமுகவில் பரபரப்பு

ஓ.பன்னீர்செல்வம் வீட்டுச்சிறையா? அதிமுகவில் பரபரப்பு
ops
ஜெயலலிதா இரண்டு முறை சிறை சென்றபோது அவருடைய முதல்வர் பதவியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் என்ற ஓ.பி.எஸ் அவர்களின் இன்றைய நிலைமை பரிதாபமாக இருப்பதாக அதிமுக வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.,

ஓ.பி.எஸ்சின் பினாமி வட்டாரங்கள், ஆதரவு அமைச்சர்கள் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு வருவது மட்டுமின்றி, கடந்த நான்கரை ஆண்டுகளில் அவர் சேர்த்த சொத்துக்களின் மதிப்பு குறித்த முழு லிஸ்ட் தயாராகி ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். யாராக இருந்தாலும் தயவு தாட்சமின்றி நடவடிக்கை எடுங்கள் என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதால் ஓ.பி.எஸ் மீது போலீஸாரின் பிடி இறுகுவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஓ.பன்னீர்செல்வம் தற்போது பொள்ளாச்சியில் சசிகலாவின் உறவினர் ஒருவரின் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரிடம் அரசு அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. தேர்தலுக்குள் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய லிஸ்ட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை முதலிடத்தில் இருந்த பன்னீர்செல்வத்தின் பெயர் தற்போது கடைசி இடத்தில்கூட இல்லையாம். விரைவில் கட்சியில் இருந்து தூக்கப்படலாம் என்றும் அவருடைய சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படலாம் என்றும் அதிமுக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply