டெல்லியில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு: தமிழக முதல்வர் மாற்றமா?
பாஜக தேசிய தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க இன்று தமிழக துணை முதல்வர் தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்றுள்ளார். இதனால் தமிழக அரசியல் மாற்றம் ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், டெல்லி சென்றுள்ளார். அவருடன் அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி. முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். டெல்லி விமானநிலையத்தில் ஓபிஎஸ் அவரகளை அதிமுக எம்பி மைத்ரேயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
டெல்லியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, ஓபிஎஸ் சந்தித்து பேசுகிறார். இதனை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்கள் சிலரையும் ஓபிஎஸ் சந்தித்து பேச உள்ளதாகவும் கடைசியில் பாஜக தலைவர் அமித்ஷாவையும் சந்திக்கவுள்ளதாகவும் தெரிகிறடு.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி, தற்போது வெளிநாடு சென்றுள்ளார் என்பதால் அவரை சந்திக்க வாய்ப்பு இல்லை என்றும் இந்த சந்திப்புக்கு பின்னர் தமிழக முதல்வர் மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.