ஜெயலலிதா வழியை பின்பற்றுங்கள்: மத்திய அரசுக்கு ஓபிஎஸ் ஆலோசனை

ஜெயலலிதா வழியை பின்பற்றுங்கள்: மத்திய அரசுக்கு ஓபிஎஸ் ஆலோசனை

மத்திய அரசு அறிவித்த மாட்டிறைச்சி தடை அறிவிப்புக்கு நமது பக்கத்து மாநிலங்களான கேரளா, புதுவை, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழக அரசு இதுவரை இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் ஓபிஎஸ் அவர்கள் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் 2001 ஆம் ஆண்டு மிருகவதையை தடுக்கும் நோக்கில் ஜெயலலிதா தலைமையில் அரசு அமைந்த போது கோயில்களில் ஆடு, கோழிகள் வெட்ட தடைவிதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பக்தர்களிடமிருந்தும், பொது மக்களிடமிருந்து எதிர்ப்பு குரல் வந்தது. தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, அந்த தடை உத்தரவை நீக்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்தார்.

மாண்புமிகு அம்மா அவர்கள் எடுத்த முடிவை போல, மத்திய அர்சும் தடை உத்தரவுக்கு எதிராக வருகின்ற கருத்துக்களையெல்லாம், எதிர்ப்புகள் என்று கருதாமல், மக்களின் உணர்வுகள் என்று கருதி, கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்ற பிறப்பித்த தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply