அதிமுகவில் இருந்து அடியோடு நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள். பெரும் பரபரப்பு

அதிமுகவில் இருந்து அடியோடு நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள். பெரும் பரபரப்பு
OPS long
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் தொண்டர்களையும், பிற கட்சியில் உள்ள தலைவர்களையும் மற்ற கட்சிகள் இணைத்து வரும் நிலையில் அதிமுகவில் மட்டும் நேரெதிராக அதிமுகவின் முக்கிய தலைவரான ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அடியோடு நீக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் பெற்று வரும் நிலையில் தேனிர் ஓபிஎஸ் வீட்டில் ஏராளமானோர் சீட் கேட்டு வருவதாகவும், அவர்களுக்கு சீட் கிடைக்க ஓபிஎஸ் தரப்பில் இருந்து உறுதி அளிக்கபப்ட்டுள்ளதாகவும்  உளவுத்துறை மூலம் தகவல் அறிந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஓபிஎஸ்க்கு வார்னிங் அளிக்கும் வகையில் அவருக்கு வலது கரங்களாக செயல்பட்டு வந்த முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், தேனி மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் எல்லப்பட்டி முருகன், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர செயலர் கே.மாரியப்பன், தென் சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி செயலர் பொறுப்பில் இருந்து வந்த எம்.கே.அசோக் எம்எல்ஏ, மீனவர் பிரிவு துணைச் செயலராக இருக்கும் டி.ரமேஷ் ஆகிய ஐந்து பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட ஐந்து பேர்களும் ஓபிஎஸ்-இன் தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளிவரவுள்ளது என்றும் ஜெயலலிதா இம்முறை தென்மாநிலத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply