தமிழக மக்களின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க உள்ளேன். பிரதமரை சந்தித்த பின் ஓபிஎஸ் பேட்டி

தமிழக மக்களின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க உள்ளேன். பிரதமரை சந்தித்த பின் ஓபிஎஸ் பேட்டி

அதிமுகவின் இரண்டு அணிகளான ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் இணைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இரு அணிகளை சேர்ந்தவர்களும், மாறி மாறி பிரதமர் மோடியை சந்தித்து வருவது இணைப்பு குறித்த சந்தேகங்களை எழுப்புகின்றது.

நேற்று முன் தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை சந்தித்த நிலையில் இன்று ஓபிஎஸ் பிரதமரை சந்தித்து இணைப்பு குறித்து ஆலோசனை செய்தார். பிரதமரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் பேசியதாவது: தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்தேன். தமிழக அரசின் நிலைப்பாடு, தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்தும் பேசினோம். தமிழக மக்களின் நலன் கருதி முடிவுகளை எடுக்க உள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது உடனிருந்த மைத்ரேயன் கூறியப்போது, ‘தமிழகத்தில் நிலவும் பொதுவான அரசியல் சூழல் குறித்தே பேசினோம். மற்றொரு கட்சியின் உள்விவகாரங்களில் பிரதமர் தலையிடுகிறார் என்ற கருத்து குறித்து பேசுவதை நாம் நிறுத்த வேண்டும். தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளைத் தீர்வு காணும் வகையில் பிரதமரைச் சந்தித்துப் பேசினோம்’ என்று தெரிவித்தார்

Leave a Reply