எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஓபிஎஸ் அணி ஆதரவா? மாபா பாண்டியராஜன் விளக்கம்
திஹார் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று திரும்பி வந்த தினகரன் சமீபத்தில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்துவிட்டு வந்தவுடன் திடீரென ஒரு தனி அணியை உருவாக்கி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக சுமார் 27 எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆபத்து ஏற்படும் என்றால் தங்கள் அணி அவருக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று ஓபிஎஸ் அணியின் மாபா பாண்டியராஜன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஏற்கனவே அவர் முதல்வர் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டால் ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று ஒருவர் செய்த டுவீட்டை ரீடுவிட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஓபிஎஸ் அணி ஆதரவு கொடுத்தாலும் ஈபிஎஸ் அணியின் ஆட்சி தப்பிக்குமா? என்பது கேள்விக்குறிதான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.