கொத்தவால்சாவடி: ஒரே இடத்தில், 11 திவ்யதேச பெருமாள் தரிசனத்தை காணும் வகையில், கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொத்தவால்சாவடியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், கடந்த, 21 முதல் நேற்று வரை, ஸ்ரீபத்ரிநாராயண சுவாமி சேவா சங்கம் சார்பில், 10ம் ஆண்டாக, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கடந்த, 21ம் தேதி லட்சுமி பூஜையும், குபேர லட்சுமி ஹோமமும் நடைபெற்றன. நேற்று முன்தினம், லட்சுமி நரசிம்ம சுவாமி, கருடவாகன தரிசனம் இடம்பெற்றது. நேற்று, பொதுதேர்வுகளில் வெற்றிபெற, ஹயக்கிரீவ ஹோமம் நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தில் உள்ள, 20 பள்ளி குழந்தைகள் ஹோமத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கு எழுதுபொருட்கள், பூஜித்த கயிறு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பூஜையின் சிறப்பம்சமாக, மதுரா, பத்ரிநாத், அயோத்தி, திருப்பதி உள்ளிட்ட, 11 திவ்யதேச சுவாமிகளின் உற்சவ மூர்த்தியர் அலங்கரிக்கப்பட்டு, ஒரே இடத்தில் காட்சி தந்தது குறிப்பிடத்தக்கது.