ஒரே பாடலில் திருமாலின் பத்து அவதாரம்!

Vishnu_Avatars

மீனோடு ஆமை கேழல் அரி
குறளாய் முன்னும் இராமனாய்த்
தானாய் பின்னும் இராமனாய்த்
தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னைக் கண்ணபுரத்து
அடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன்சொல் தமிழ்மாலை
செப்பப் பாவம் நில்லாவே

மீன்    – மச்சாவதாரம்
ஆமை    – கூர்மாவதாரம்
கேழல்    – வராக அவதாரம்
அரி     – நரசிங்க அவதாரம்
குறள்    – வாமன அவதாரம்
முன் இராமன்     – பரசுராமன்
தான்    – தசரதராமன்
பின் இராமன்    – பலராமன்
தாமோதரன்    – கிருஷ்ணன்
கல்கி    – கல்கி அவதாரம்
இப்படி பகவான் எடுத்த பத்து அவதாரங்களையும் ஒரே பாட்டில் விவரித்துப் பாடியுள்ளார் திருமங்கையாழ்வார்.

Leave a Reply