ஆரஞ்சு பிரியாணி

73480470-003c-4b52-aa41-fa35b5d4e125_S_secvpf

தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு பழம் – 4 அல்லது 5
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
வெங்காயம் – 2 அல்லது 3
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி
புதினா இலைகள் – அரை கைப்பிடி
காரட் – 1 அல்லது 2
காஷ்மீரி சில்லி பவுடர் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

செய்முறை:

* வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். காரட்டை துருவி வைக்கவும்.

* அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* ஆரஞ்சு பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும். (ஒன்றரை கப்   அளவு)

* குக்கரில் எண்ணெய் ஊற்றி கரம் மசாலா தூள் போட்டு நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

* பின்னர் நறுக்கிய புதினா, மல்லி இலைகளை சேர்த்து வதக்கி விட்டு அதனுடன் மிளகாய்த் தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.

* அதன் பிறகு ஆரஞ்சு ஜூஸை சேர்த்து மூடி வைத்து கொதிக்க வைக்கவும்.

* கொதித்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து உப்பு சரி பார்த்து மூடியிட்டு வேக வைக்கவும்.

* அரிசி முக்கால் பதம் வெந்ததும் குக்கர் மூடியை திறந்து கிளறி விட்டு துருவிய காரட் சேர்த்து மீண்டும் குக்கரை மூடி மேலும் 5 – 10 நிமிடங்கள் தம்மில் போடவும்.

* இனிப்பு சுவையுடன் கூடிய ஆரஞ்சு பிரியாணி தயார். இதை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

Leave a Reply