விண்வெளியில் சொகுசு ஓட்டல்: ஓரியன் ஸ்பேன் நிறுவனம் திட்டம்
முதல்முறையாக விண்வெளியில் சொகுசு ஓட்டல் ஒன்று கட்டும் திட்டம் ஒன்றை ஓரியன் ஸ்பேன் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது
விண்வெளி சொகுசு ஓட்டலின் பணிகள் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கி வரும் 2021-ம் ஆண்டு நிறைவடையும் என ஓரியன் ஸ்பேன் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த ஓட்டலில் 2022ஆம் ஆண்டு முதல் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும் அதன்பின்னர் பொதுமக்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் விண்வெளி ஓட்டலுக்கு அழைத்து செல்வதற்கு முன்னர் பூமியில் பயிற்சிகள் கொடுக்கப்படும் என்றும் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த ஓட்டலுக்கு அனுமதிக்கப்படுவர்கள் என்றும், இதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் இயங்கும் ராக்கெட் வடிவமைக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அரோரா ஸ்பேஸ் ஸ்டேஷன் பெரிய ஜெட் ராக்கெட் போல இருக்கும். இதன் நீளம் 43.5 அடியும், அகலம் 14.1 அடியும் இருக்கும். இதன் கொள்ளளவு 5,650 கன அடி இருக்கும். இது மக்கள் தங்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அமைக்கப்பட உள்ளது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் ”ஓரியன் ஸ்பேன்” நிறுவனத்தின் அலுவலகமும் கட்டப்பட உள்ளது.