மனிதனின் கருமத்தை அழிக்கும் சக்தி யாருக்கு தான் உண்டு ?
ஒரு ஒரு மனிதனுக்கும் 9 விதமான கர்மம்கள் உண்டு என்று அகத்தியர் சொல்கிறார் .
இவைகள் தான் நவ கிரக அமைப்பில் நம்மை ஆட்டி வைக்கிறது .
இதை கவனித்து படிக்கவும் …
ஒரு ஒரு கிரக தேவதைகளும் ஒரு ஒரு கர்மத்தை நமக்கு செய்ய வைக்கும் ,செய்த வினைக்கு தண்டனையும் தரும் .இதை தடுக்க
இதில் அஷ்ட கர்ம சாந்தி என்று ஒரு பூசையே உண்டு .
இதை சித்த வழிபாடு செய்யும் நபர்கள் அறிவார்கள் .
மனிதனின் விந்து வழியாக ஆணுக்கும் சுக்லாம் வழியாக பெண்ணுக்கும்
சனி என்ற கிரக தேவர் உள்ளே நுழைந்தவுடன் மற்ற 8 தேவர்களும் கருவின் உள்ளே வந்து செயலை செய்வார்கள் ..
இப்படி வினைகளை சுமந்து தான் எல்லோரும் பிறக்கிறோம் .
9 தேவர்களில் கேது மட்டும் ஞான கிரகம் என்றும் இவருக்கு பரிகாரம் கிடையாது என்று சொல்ல படுகிறது .
வினைகள் முழுவதும் அழிந்தவுடன் ஞான கேதுவின் ஆசியுடன் சித்தர்கள் ,மகான்கள் நம்மை அழைத்து செல்வர்கள் .
இந்த 9 தேவர்களை சிவ முறையாம் சைவ நெறிகளில் காணலாம் .
ஆம் நீங்கள் 9 தேவர்கள் உடைய வைணவ கோவிலை கண்டது உண்டா ?
இருக்க முடியாது காரணம் அவர்கள் 9 தேவர்களை தேவதைகள் என்று ஒதுக்கி விட்டார்கள் .
எந்த சிவன் கோவிலுக்கு போனாலும் 9 நபர்களை காணலாம் .
சமய சைவ நூலில் கிரகம்கள் வழிபாடு செய்த சிவன் கோவில்கள் என்று
நிறைய கோவில்கள் சொல்ல பட்டு உள்ளது .
சைவ நெறியில் உள்ள அமைப்பின் படி கர்மம்களை செய்ய வைக்கும் தேவர்களையும் அசுரர்களையும் அடக்கும் அமைப்பு உள்ளது என்று நாம்
அறிந்து கொள்ளலாம் .
இந்த சைவ நெறியில் முழுவதும் நாம் நம்மை ஈடு படுத்தி கொண்டும் ,தேவதைகள் ஆசிகள் ,தெவம்களின் ஆசிகளை பெற்றாலும்
முழுமையாக கர்மத்தை/வினைகளை அழிக்க முடியாது ..
எப்படிதான் அழிப்பது ?இதற்க்கு தீர்வு ..
இந்த வினைகளை அழித்து நம்மை சுத்த படுத்திக்கொள்ள இரண்டு வழிகள்
தான் உண்டு ஒன்று அனுபவிப்பது அடுத்து தவம் இருந்து இறைநிலை அடைவது ….
தேவதைகளும் ,தெய்வமும் தவம் இருந்து இறைநிலைகளை அடைந்து கொள்ளும் ,
நாம் அவைகளை வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய கர்மத்தை தடுத்து அல்லது அழிக்க வழிகளை மட்டும் சொல்லும் ..
வேதாத்திரி மகரிஷி அவர்கள் அடிக்கடிசொல்வது வினைகளை அனுபவித்து முடித்து விடவேண்டும் .
பிராந்தையர் என்னும் சித்தர் யானை கால் நோயுடன் அவஸ்தை பட்ட பொழுது காளி தேவி அவரிடம் தோன்றி உடலை சரி செய்கிறேன் என்றதும் அவர் வேண்டாம் கர்மத்தை அனுபவித்து கழிக்க வேண்டும் என்று மறுத்து விட்டார் …
ராமகிருஷ்ண பரமஹம்சர் புற்று நோயால் அவஸ்தை பட்ட பொழுது
விவேக அனந்தர் தாங்கள் வைத்திய முறைகளை எடுத்து கொள்ளலாம்
என்று சொன்ன பொழுது அவர் வினைகளிடம் இருந்து தப்பினால் மீண்டும்
அடுத்த பிறவி கொடுத்து தொடர்ந்து வரும் அகவே வேண்டாம் என்று மறுத்து விட்டார் .
ஞானிகள் சொல்வார்கள் கஷ்டத்தை ரசித்து அனுபவிக்க வேண்டும் என்பார்கள் .
கர்மத்தை கழிக்க /வினைகளை கழிக்க தவம் செய்ய வேண்டும் என்று
ஞானிகள் சொல்கிறார்கள் .
5 எழுத்து மந்திரம் ,8 எழுத்து மந்திரம் 6 எழுத்து மந்திரம் சொல்வதால்
அந்த தெய்வம்களை வசபடுத்தலாம் அன்றி ஒரு பொழுதும் வினைகளை அழிக்க முடியாது ..
தவம் என்பது பிடிவாதம் என்று சொல்லலாம் .
நான் உன்னிடம் வரவேண்டும் என்ற வைராக்கியம் ,
எனக்கு உன்னை காணும் வரை முயற்சி நிற்காது என்ற வேகம் ,
மேலும் இறைநிலை அடைந்த மகான்கள் ,சித்தர்கள் ,தவசிகள் ,போன்றவர்களின் தரிசனம் அவர்கள் பின்பற்றிய முறையான வாழ்க்கை நெறி இவைகள் தான் நம்மிடம் உள்ள வினைகளை அகற்றும் .
நண்பர் ஒருவர் எப்பொழுதும் குருவே துணை ,என்று சொல்லி கொண்டே இருப்பார் ,
மேலும் சில சக்கரம், எந்தரம்,மற்றும் குருவின் புகை படம் வைத்து இருப்பார் .
இவர் குரு குரு என்று அடிக்கடி அவர் பெயரை சொல்கிறார் ,மேலும் அந்த ஆசிரமம் சென்று விடுகிறார் .
நான் இதை பற்றி அவரிடம் கேட்ட பொழுது அவர் சொன்னார்
குருவின் ஆசி கிடைத்தால் நான் கர்ம பதிவை வென்று ,வினை இல்லா தன்மையுடன் மோட்சம் அடைவேன் …
உண்மை தான் ,நான் அந்த குருவின் படத்தை வாங்கி பார்த்தேன் ,
அவர் மிக செழுமையாக உடல் அமைப்பும் ,பல தங்க நகைகளை அணித்து அமர்ந்து இருந்தார் ,மேலும் அவர் கொடுத்து யந்திரம் வசிய கட்டு யந்திரம் என்று புரிந்து கொண்டேன் .
நான் அவரிடம் எப்பொழுது அவரிடம் செல்வீர்கள் என்ற பொழுது ,அவர்
சொன்னார் குரு என்னிடம் பெட்டி மற்றும் கை விளக்கு கேட்டார் அதை வாங்கி கொண்டு சனிகிழமை செல்வேன் என்றார் .
சரியான குரு ,குரு நிலைக்கு மாறிய மனிதன் எதையும்
பெற்று கொள்ள மாட்டார் ,மேலும் மலப்பை சுங்கி கண்கள் வற்றி கண்களில் வெளிச்சம் உண்டாகும் ,அவரே காய சுத்தியும் காய சித்தியும்
அடைந்தவர் இப்படி அடைந்தவர்கள் தான் 8 கர்ம வினைகளை உடைத்து
எறிவார்கள்
இப்படி தவறான மனிதர்களிடம் நாம் மாட்டி கொள்ள கூடாது .
கர்மத்தை கலைக்க அழிக்க சரியான குருவை தேர்வு செய்து மனத்தால்
வழிபாடு செய்ய வேண்டும் ..
சித்தர்களை அடைந்தாலும் வினைகளை அழித்து விடுவார்கள் …
சிவனும் பெருமாளும் முருகனும் அம்பிகையும் மற்ற தெய்வம்களும்
நமக்கு கர்மத்தை அழிக்க உதவி செய்வார்கள் மட்டுமே
எம்மானுவேல் என்கிற ஏசுநாதர் சொன்னார் பரமண்டலத்தில் இருக்கும் என் பிதாவே,
நபிகள் நாயகம் அவர்கள் அல்லாவின் கூற்று படி தான் நாம் எல்லாம் செய்கிறோம்
திருமந்திரத்தை எழுதிய திருமுலர் என்னில் நுழைந்த இறைவன் எழுத்திய நூல் இந்த திருமந்திரம் என்று சொன்னார்
எந்த சமயத்தை பின்பற்றினாலும் ஒலி ஒளியாகியே இறைவனை கண்டவர்களும் அடைந்தவர்களும் மட்டுமே நம்முடைய வினைகளை
அழிக்க முடியும் ……
இந்த பொன் வெளிச்சத்தை பார்த்த சித்தர்கள் இதை எப்படி அடையலாம்
என்று சொல்லி உள்ளார்கள் அதை கண்டு அறிந்து நாம் செய்தால் நாமும் அந்த வெட்ட வெளியை காணலாம்