5 மனைவிகளுடன் பின்லேடன் உயிருடன் இருக்கின்றார். விக்கிலீக்ஸ் நிறுவனரின் அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவின் முக்கிய பல ரகசியங்களை வெளியிட்டு கைது நடவடிக்கைக்கு பயந்து ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் எட்வர்டு ஸ்னோடன், ‘அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்படவில்லை. அவர் உயிருடன்தான் இருக்கிறார்’ என்ற அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தற்போது வாழ்ந்து வரும் எட்வர்டு ஸ்னோடன் மாஸ்கோ டிரிபியூன் இதழுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்படவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறார். பஹாமாஸில் ஐந்து மனைவிகள் உள்பட குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஒசாமா தற்போதும் அமெரிக்காவின் சிஐஏ ஊழியர்கள் பட்டியலில் உள்ளார். அவருக்கு மாதாமாதம் 6 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் அமெரிக்கா செலவழித்து வருகிறது.
பாகிஸ்தானில் ஒசாமா கொல்லப்பட்டது போன்று பொய்யான நாடகத்தை அமெரிக்கா நடத்தியது. ஒசாமா மற்றும் அவரது குடும்பத்தாரை பஹாமாஸில் யாருக்கும் தெரியாத இடத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த நாடகத்திற்கு பாகிஸ்தான் உளவுப்படைக்கும் தொடர்பு உண்டு.
தாடியும், ராணுவ ஜாக்கெட்டும் இல்லாமல் ஒசாமாவை யாராலும் அடையாளம் காண முடியாது. ஒசாமா உயிருடன் தான் உள்ளார் என்பதை நான் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். அந்த புத்தகம் இம்மாதம் ரிலீஸ் ஆகிறது” என்று கூறினார்.
எட்வர்டு ஸ்னோடன் கூறிய இந்த பேட்டிக்கு அமெரிக்க அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.