உலகம், நிகழ்வுகள்எங்கள் நாட்டு விமானம் சுடப்பட்டது ஏன்? ரஷ்ய அதிபர் புதின் திடுக்கிடும் தகவல் Posted on December 1, 2015December 1, 2015 by 01 Dec எங்கள் நாட்டு விமானம் சுடப்பட்டது ஏன்? ரஷ்ய அதிபர் புதின் திடுக்கிடும் தகவல் தீவிரவாதிகளுடனான வர்த்தக்கத்தை காப்பாற்றி கொள்வதற்காக துருக்கி தங்கள் நாட்டு விமானத்தை சுட்டு தள்ளியதாக ரஷ்ய அதிபர் புதின் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். இதனால் துருக்கி-ரஷ்யா இடையே பதட்டம் அதிகரித்துள்ளது. நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் பருவ நிலை மாநாடுக்கு கலந்து கொள்ள வந்திருந்த ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ”ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் துருக்கிக்கும் இடையே நடைபெறும் எண்ணைய் வர்த்தகத்தை பாதுகாக்கவே எங்கள் நாட்டு போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார். புதினின் குற்றச்சாட்டுக்கு துருக்கி அதிபர் என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை அறிய ஊடகங்கள் பரபரப்புடன் காத்திருக்கின்றது. இந்நிலையில் ரஷ்யா தனது போர் விமானங்கள், ஏவுகணை தாங்கிய கப்பல்கள் ஆகியவற்றை துருக்கி எல்லையில் குவித்து வருகிறாது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. English Summary: Our aircraft shot fired for business with ISIS terrorists said Putin சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் இளையமகன் – துணை முதல்வர், மூத்த மகன் – அமைச்சர், மனைவி-மேலவை தலைவர். லாலு குடும்பத்தின் ஆக்கிரமிப்பு