மெரினாவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம். ஆயிரத்தில் ஒருவன் படம் பார்க்கும் முதல்வர்
சென்னை மெரீனா கடற்கரையில் தமிழ் உணர்வுடன் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், சிறுவர் சிறுமிகள், ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் இந்த போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த அதே நேரத்தில் தமிழக முதல்வர் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் பார்த்து கொண்டிருக்கின்றார்.
ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தார் என்பதுதான் நினைவுக்கு வருகிறது. இன்னும் நான்கு வருடங்கள் கழித்து இதே முதல்வர் ஓட்டு கேட்டு வருவார். அப்போது இந்த நிகழ்ச்சியை அவருக்கு ஞாபகப்படுத்துங்கள் தமிழர்களே….