ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள். தினமும் 18 மணிநேரம் குழந்தைகளை கவனித்து வரும் தாய்.

[carousel ids=”34855,34856,34857,34858,34859,34860,34861,34862,34863,34864,34865″]

இங்கிலாந்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. இரண்டு ஆண்குழந்தை மற்றும் இரண்டு பெண்குழந்தை என நான்கு குழந்தைகளும் நலமாக இருப்பதால் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள ஷரான் டர்னர் என்ற 38 வயது பெண்ணுக்கு சிலநாட்களுக்கு முன்பு பிரசவ வலி வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இங்கிலாந்து மருத்துவமனையில் இரண்டு ஆண்குழந்தை, இரண்டு பெண்குழந்தை என நான்கு குழந்தைகள் அடுத்தடுத்து சுகப்பிரசவமாக பிறந்தது. ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்பிறப்பது என்பது 70 மில்லியன் தாயாருக்கு ஒருவருக்குதான் உலகில் பிறப்பதாக சர்வே கூறுகிறது.

ஷரான் டர்னர் தன்னுடைய குழந்தைகளை கவனித்துக்கொள்வதிலேயே நாள் ஒன்றுக்கு 18மணிநேரம் செலவிடுவதாக கூறுகிறார். தாய்ப்பாலுக்காக குழந்தைகள் மாறி மாறி அழுதுகொண்டே இருப்பதால் அவர்களுக்கு பால் கொடுக்கவே ஷரானுக்கு நேரம் சரியாக இருக்கின்றதாம். ஷரானின் பெற்றோர்களும் கணவரும் அவருக்கு உதவியாக இருந்து குழந்தைகளை கவனித்து வருகின்றனர்.

குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க தான் தினமும் பலமணிநேரம் செலவு செய்தாலும், அவர்களிடம் இருந்து வெளிப்படும் ஒரு சிறு புன்னகை தன்னுடைய களைப்பை போக்கிவிடும் என உணர்ச்சி பொங்க கூறுகிறார் ஷரான்ன். ஜேம்ஸ், ஜோஸ்வா, என்ற இரண்டு ஆண்குழந்தைகளும், எமிலி மற்றும் லாரன் ஆகிய இரண்டு பெண்குழந்தைகளையும் ஷரான் தம்பதியினர் மிகவும் செல்லமாக வளர்த்து வருகின்றனர். இவர்களை குறித்து ஒரு குறும்படம் தயாரிக்கும் முயற்சியில் பிபிசி தொலைக்காட்சி ஈடுபட்டுள்ளது.

Leave a Reply