ஹரியானா சாமியாரை கைது செய்ய முடியாமல் போலீஸார் திணறல். பெரும் பரபரப்பு

hariyanaஹரியானா மாநிலத்தில் பிரபலமான சாமியார் ராம்பாலைக் கைது செய்ய சென்ற காவல்துறையினர் சென்ற போது சாமியார்கள் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்ட வன்முறை கும்பல் ஒன்று அவரை கைது செய்யவிடாமல் வன்முறையில் இறங்கியதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ஹரியானா சாமியார் ராம்பால் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது ஜாமீனில் உள்ள ஒரு வழக்கில் பலமுறை நீதிமன்ற கேட்டுக்கொண்டும் ஆஜராகாமல் இருந்தார். இதனால் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அவரை கைது செய்ய நீதிமன்றம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி சாமியார் ராம்பலைக் கைது ஹரியானா மாநில காவல்துறையினர் சாமியாரின் ஆசிரமத்திற்குள் செல்ல முயன்றபோது சாமியாரின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது அடியாள்கள் போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் அவர்கள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் சாமியாரின் ஆசிரமம் இருந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

காவல்துறையினர்  கண்ணீர் புகைக்  குண்டுகளை வீசி கூட்டத்தைக்  கலைக்க முயன்ற போதிலும் சாமியார் ராம்பாலை சுற்றி அவரது ஆதரவாளர்கள், மனித வளையம் அமைத்து அவரை போலீஸார் நெருங்க விடாமல் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆசிரமத்திற்கு செல்லும் குடிநீர், உணவு சப்ளை, மின் விநியோகம் உள்ளிட்டவற்றை துண்டித்துள்ள காவல்துறையினர், சாமியாரின் ஆதரவாளர்கள் மற்றும் சீடர்களை அங்கிருந்து வெளியேறுமாறு துண்டு பிரசுரங்களை வீசி வருகின்றனர். இந்நிலையில் எந்த நேரத்திலும் சாமியார் ராம்பால் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நடந்த சம்பவம் குறித்து மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளது.

Leave a Reply