பிரதமர் மோடியின் 3 ஆண்டு கால ஆட்சி எப்படி? ஆய்வின் முடிவு
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு பதவியேற்றது. இந்த மூன்று ஆண்டு காலத்தில் மோடியின் ஆட்சி குறித்து தனியார் செய்தி இணையதளம் ஒன்று ஆய்வு எடுத்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த ஆய்வின்படி இந்திய மக்களில், 60% பேர் பிரதமர் மோடியின் ஆட்சியை விரும்புவதாக தெரியவந்துள்ளது.
மோடியின் ஆட்சி விரைவில் முடிய வேண்டும் என எதிர்க்கட்சிகளும், சமூக வலைத்தளங்களில் பலரும் கூறி வரும் நிலையில், மும்பையை சேர்ந்த தனியார் செய்தி இணையதளத்தின் ஆய்வு அதற்கு நேர்மாறாக உள்ளது.
இந்த ஆய்வின்படி 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள், பிரதமர் மோடியின் ஆட்சியை விரும்புவதாகவும்,. 59 சதவீத மக்கள், மாற்று ஆட்சி வேண்டும் என்றும் தெரிவித்தும் உள்ளனர்.
மோடியின் ஆட்சியில் பல பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், புதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, சுகாதார சேவைகள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உயர்வு போன்றவை காரணமாக, மோடியின் ஆட்சி மீது பலர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாகிஸ்தான், சீனா, இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளின் உறவில் மோடி தலைமையிலான அரசு புதிய சீர்திருத்தம் செய்துள்ளதற்கு, கணிசமான மக்கள் ஆதரவும் தெரிவித்து உள்ளதாக, ஆய்வு நடத்திய, தனியார் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது