கேரளாவைச் சேர்ந்தவர் தீபா. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். உடல்நிலை சரியில்லாத பெற்றோரைப் பார்ப்பதற்குத் தீபா கேரளா சென்றுள்ளார். அப்போது அவருடைய மின்னஞ்சலுக்கு ஒரு தகவல் வந்துள்ளது.
தீபா மற்றும் இவர் கணவர் இருவருமே Mahzooz குலுக்கலில் கலந்து கொண்டுள்ளனர். அதில் Mahzooz குலுக்கலில் வெற்றி பெற்று Dh1,000,000 (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி) வெற்றி பெற்றுள்ளீர்கள் என மின்னஞ்சல் வந்துள்ளது.
இதன்மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரியாக மாறிவிட்டார்.