பிக்பாஸ்-ஐ விட்டு வெளியேறிய ஓவியா? இனி பிக்பாஸ் புஸ்பாஸ்?

பிக்பாஸ்-ஐ விட்டு வெளியேறிய ஓவியா? இனி பிக்பாஸ் புஸ்பாஸ்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் இந்த நிகழ்ச்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த ஓவியா நேற்று தன் வாயாலேயே வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டார். இதைத்தான் மற்ற பங்கேற்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

நம்முடன் இருந்த ஒருவர் வெளியேறுகிறாரே என்ற வருத்தமே இல்லாமல் மகிழ்ச்சியால் துள்ளிய பங்கேற்பாளர்கள், ஓவியா முன் மட்டும் வருத்தப்படுவது போல நடித்தனர்.

ஓவியா ஒன்றே ஒரே நபருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த கோடிக்கணக்கான பார்வையாளர்கள் இனிமேல் இந்த நிகழ்ச்சியை பார்ப்பார்களா? என்பது கேள்விக்குறியே! கமல் ஏதாவது வித்தியாசமாக செய்யாவிட்டால் பிக்பாஸ், புஸ்பாஸ் ஆக மாறிவிடுவதை தவிர்க்க முடியாது

Leave a Reply