தமிழக அரசியலுக்கு தாவுகிறார் ப.சிதம்பரம். முதல்வர் பதவியை பிடிக்க திட்டம்?

p.-chidambaramதமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ப.சிதம்பரத்தை நியமனம் செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

கடந்த் பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் கட்சியை எப்படி பலப்படுத்துவது என்று ஆலோசனை செய்து வருகிறது.  காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஏ.கே.அந்தோணி இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை செய்து வருகிறது. இந்த ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும், தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக காங்கிரஸ் போராட வேண்டும், இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்க குரல் கொடுக்க வேண்டும் என்பதுபோன்ற ஆலோசனைகள் அவருக்கு கூறப்பட்டன.

இதில் தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற உடனடியாக ஏ.கே.அந்தோணி ஒப்புக்கொண்டார். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ப.சிதம்பரத்தை நியமனம் செய்துவிட்டு, அவரது எதிர்கோஷ்டியான ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ப.சிதம்பரமும் டெல்லி அரசியலை முடித்துவிட்டு தமிழக அரசியலில் தீவிர இறங்க முடிவு செய்துள்ளார்.கட்சியை கிராமங்கள் தோறும் நேரில் சென்று பலப்படுத்தி வலுவான கூட்டணியை காங்கிரஸ் தலைமையில் அமைத்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்பது ப.சிதம்பரத்தின் கனவு என்று அவருடைய வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply