தலைநகர் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை தாங்கினார்.
காங்கிரஸ் கட்சியினர் போலீஸ்காரர்களை கண்டுகொள்ளாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போலீசாருக்கும், ப.சிதம்பரத்திற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் ப.சிதம்பரத்தை போலீசார் தள்ளியதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ப.சிதம்பரத்தின் இடது கையின் விலா எலும்பு முறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.