தேர்தல் அடிக்கடி நடப்பது நல்லது என நினைக்கின்றேன்: ப.சிதம்பரம்
தேர்தல் நடைபெற இன்னும் ஒருசில மாதங்கள் இருப்பதால் ஜிஎஸ்டி வரியில் இருந்து சில பொருட்கள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மத்திய அரசு வரிகளை குறைத்து வருவதாகவும் இதற்காகவே பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி தேர்தல் நடைபெறுவது நல்லது என நினைக்கிறேன் என்றும் ப.சிதம்பரம் தனது டுவீட்டில் பதிவு செய்துள்ளார்.
ஆனால் ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு தமிழிசை செளந்திரராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். .எஸ்.டி., வரி குறைப்பு லோக்சபா தேர்தலுக்காக அல்ல என்றும், பல்வேறு தொழிலதிபர்கள், வியாபார அமைப்புகள், பொதுமக்கள் கோரிக்கைகளின் பரிசீலனைக்கு பின்னரே மத்திய அரசு வரியை குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
When elections are around the corner, government cuts rates. I suppose that makes a good case for frequent elections in different states!
— P. Chidambaram (@PChidambaram_IN) July 22, 2018