காஷ்மீரில் பத்திரிகையாளர் படுகொலை: ப.சிதம்பரம் கண்டனம்

காஷ்மீரில் பத்திரிகையாளர் படுகொலை: ப.சிதம்பரம் கண்டனம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் `ரைசிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான சுஜாத் புஹாரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த படுகொலைக்கு ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்பி வருவதாக மத்திய அரசும், காஷ்மீர் மாநில அரசும் கூறி வரும் நிலையில் இந்த படுகொலை நடந்துள்ளதால் எதிர்க்கட்சிகள் ஆவேசமாக தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான ப.சிதம்பரம் இந்த படுகொலை குறித்து சில டுவீட்டுக்களை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டியவர்கள் கடமை தவறியதன் விளைவு பத்திரிகையாளர் சுஜாத் புஹாரியின் படுகொலை. இன்னும் எத்தனை ஜவான்களையும், சாதாரண குடிமக்களையும் இழக்கப்போகிறோம்? என்று கூறியுள்ளார்.

Leave a Reply