முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் கேரள ஆளுனராக நியமனம்.

sadasivamகடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரள ஆளுனர் ஷீலா தீட்சித் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரத பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட மாநில கவர்னர்கள் நீக்கப்பட்டு, புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 26ஆம் தேதி கேரள ஆளுனர் ஷீலா தீட்சித் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, கேரளாவின் புதிய ஆளுனராக தமிழ்நாட்டை சேர்ந்த சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில நாட்களில் கேரள கவர்னராக பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 40வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply