பார்த்தால் பாவம் தீரும்!

picture-24-Sorimuthu-ayyanar-temple

சாஸ்தா கோயில்களில் முதல் கோயில் என புகழப்படுவது திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள சொரிமுத்தையனார் கோயில். இந்தக் கோயில் தாமிரபரணி ஆற்றின் நடுவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு அமாவாசையும் பக்தர்கள் தர்ப்பணம் செய்து, சாஸ்தாவை வழிபடுகின்றனர். அகத்தியருக்கு சிவன் கல்யாண கோலத்தைக் காட்டிய கல்யாணி தீர்த்தமும் இந்த மலையில் உள்ளது. இதில் நீராட முடியாது. ஆனால், இதைப் பார்த்தாலே பாவம் தீரும். கல்யாணி தீர்த்தத்தில் இருந்து வரும் தண்ணீர், மலைப்பாறையைக் கடந்து அகத்தியர் அருவியாக விழுகிறது. இதில் நீராடினால் புண்ணியம் சேரும். தை அமாவாசை நாளில் பாபநாசநாதர் கோயில் முன்பு ஓடும் தாமிரபரணி படித்துறையில் நீராடி, பிதுர் தர்ப்பணம் செய்தால் சகல பலனும் கிடைக்கும். ஏனெனில், கங்காதேவியே தன் பாவம் தீர, தாமிரபரணியில் இந்த இடத்தில் நீராடியதாக பாபநாசம் தல வரலாறு கூறுகிறது.

banner

Leave a Reply