67 வயது ஹாலிவுட் நடிகரை உதறிய சென்னை மாடல் அழகி.

padma lakshmiசென்னையை சேர்ந்த பிரபல மாடல் அழகி மற்றும் நடிகையுமான பத்மலட்சுமி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை காதலித்து பின்னர் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மூன்று வருடம் மட்டுமே அவருடன் குடும்ப வாழ்க்கை நடத்திய பத்மலட்சுமி, பின்னர் அவரை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.

பின்னர் தன்னைவிட 23 வருடங்கள் வயதில் மூத்த பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கிரே அவர்க்ளை காதலித்து அவருடன் திருமணம் செய்யாமலேயே லிவிங் டுகெதர் பாணியில் வாழ்ந்து வந்தார்.

ஆனால் தற்போது அவரையும் பிரிந்து அமெரிக்காவில் தனியாக பத்மலட்சுமி வாழ்ந்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

44 வயதான  பத்மலக்ஷ்மி  சென்னையை சேர்ந்தவர். அமெரிக்காவின்   கலிபோர்னியா மாகணத்தில் செட்டில் ஆனவர். மாடலிங் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். மேலும்   உணவு வகைகள் பற்றி   நூல் எழுதுவதிலும் கை தேர்ந்தவர்.அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் பல வெற்றிகரமான சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

Leave a Reply