பத்மநாபசுவாமி கோவிலில் ௨ள்ள அறை போலவே ஸ்ரீரங்கம் கோவிலிலும் பழங்கால நிலவறை கண்டுபிடிப்பு!

Sri-Ranganathaswamy-Temple-4-10342

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், பழங்கால நிலவறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது. கோவில் முழுவதும் சுத்தம் செய்தல் மற்றும் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை, ரங்க விலாஸ் மண்டபத்திற்கு இடது புறம் உள்ள வேணுகோபால சுவாமி சன்னிதி பகுதியை சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது, சன்னிதியின் வலது புறம், மண் சுவரில் தன்வந்தரி ஓவியம் இருந்த இடத்தை தட்டிப் பார்த்தபோது, செங்கல் சுவர் அமைத்து மூடி இருந்தது தெரிய வந்தது. தொழிலாளர்கள், உடனே, கோவில் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

முதல் அறை: கோவில் இணை ஆணையர் ஜெயராமன், செயற்பொறியாளர் சிதம்பரம் உள்ளிட்ட, அதிகாரிகள் முன்னிலையில், சுவரை உடைத்து பார்த்தபோது, 20க்கு, நான்கரை அடியில், அறை ஒன்று இருந்தது. அறைக்குள் சென்று பார்த்தபோது, ஓரிடத்தில், இரண்டுக்கு, இரண்டு சதுர அடியில், கருங்கல்லால், ஒரு பகுதி மூடப்பட்டிருந்தது.

DSCF0927இரண்டாவது அறை: அதை நீக்கி பார்த்தபோது, கீழே, 8 அடி ஆழத்தில், 20க்கு, நான்கரை அடியில், ரகசிய அறை ஒன்று இருந்தது. இதை பார்த்து, அதிகாரிகளும், தொழிலாளர்களும் ஆச்சரியம் அடைந்தனர். இரு அறைகளிலும், எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. அங்கிருந்த மண் அகற்றப்பட்டு, அந்த அறை சுத்தம் செய்யப்பட்டது.

indian_hindu_god_lord_tirupati_temple_venkatachalapathy_venkateswara_lakshmi_image_high_resolution_desktop_wallpaper

பழங்கால நிலவறை: இது குறித்து, கோவில் அலுவலர்கள் கூறியதாவது: தொல்லியல் துறையினர், ’உள்ளே, அறை இருக்கலாம்’ என கூறினர். அதனால், மண்சுவரை அகற்றி பார்த்தோம். உள்ளே, பழங்கால நிலவறை இருந்தது; வேறு எந்த பொருட்களும் இல்லை. வேணுகோபால சுவாமி சன்னிதிக்கும், அமிர்த கலச கருட சன்னிதிக்கும் இடையே, இந்த நிலவறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில், பயன்பாட்டில் இருந்த இந்த அறை, பின் பயன்பாடில்லாமல் மூடப்பட்டிருக்கலாம். இது குறித்து, சென்னையைச் சேர்ந்த தொல்லியல் துறை வல்லுனர் நரசிம்மன், ஆய்வு செய்து வருகிறார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Leave a Reply