பத்மநாபன் சுவாமி கோவிலுக்குள் சுடிதார் அணிந்து செல்லலாமா? கோவில் நிர்வாகம் புதிய அறிவிப்பு

பத்மநாபன் சுவாமி கோவிலுக்குள் சுடிதார் அணிந்து செல்லலாமா? கோவில் நிர்வாகம் புதிய அறிவிப்பு

Sri Padmanabhaswamy templeதமிழகத்தில் உள்ள கோவில்களில் ஆண்கள், பெண்கள் ஆகியோர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது போலவே கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலும் சமீபத்தில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதன்படி பெண்கள் சுடிதார், சில்வார் கம்மீஸ் , ஜீன்ஸ் இறுக்கமாக ஆடை அணிந்து வர கூடாது என கோவில் நிர்வாகம் கட்டுப்பாடு விதித்தது.

ஆனால் இந்த கட்டுப்பாட்டை தளர்த்தும்படி சமீபத்தில் கோவில் நிர்வாகத்திடம் பெண்கள் அமைப்பு கோரிக்கை ஒன்றை வைத்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த நிர்வாகம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி இன்று முதல் பெண்கள் சுடிதார், சில்வார் கம்மீஸ் போன்ற ஆடைகளை அணிந்து கோவிலுக்குள் இறை வழிபாட்டு நடத்தலாம். இந்த அறிவிப்புக்கு பெண்கள் கோவில் நிர்வாகத்திற்கு நன்றி கூறியுள்ளனர்.

Chennai Today News: Kerala’s Sree Padmanabhaswamy Temple Relaxes Dress Code For Women

Leave a Reply