அணு ஆயுதங்கள் இந்தியாவை விட பாகிஸ்தானில் அதிகம். ஸ்வீடன் அமைப்பு எச்சரிக்கை

அணு ஆயுதங்கள் இந்தியாவை விட பாகிஸ்தானில் அதிகம். ஸ்வீடன் அமைப்பு எச்சரிக்கை

india pakistanஉலகில் உள்ள முக்கிய நாடுகளில் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பு கணக்கெடுத்து வருகிறது. இந்த கணக்கெடுப்புக்கு பின்னர் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகள் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைத்து வரும் நிலையில் சீனா மட்டும் அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானிடம் 110 முதல் 130 அணு ஆயுதங்கள் வரை உள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்தியாவிடம் 100 முதல் 120 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ளதாகவும் இந்தியாவை விட பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் அதிக இருப்பதாகவும் இந்த அமைப்பு கூறியுள்ளது. “தங்கள் நாடு நினைத்தால் 5 நிமிடத்தில் இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதலை நடத்த முடியும்’ என்று பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ.க்யூ.கான் கூறியுள்ளதே இதற்கு உதாரணம் என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை அடுத்து வடகொரியாவும் தொடர்ந்து அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாகவும், அந்நாடும் பாகிஸ்தானை போலவே அச்சுறுத்தலுக்கு உரிய நாடு என்றும் கூறியுள்ளது.

மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 நாடுகளிடம் மட்டும் 15,395 அணு ஆயுதங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த நாடுகளிடம் மொத்தம் 15,850 அணு ஆயுதங்கள் இருந்தன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply