உளவு பார்த்த பாகிஸ்தான் அதிகாரி 48 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு

உளவு பார்த்த பாகிஸ்தான் அதிகாரி 48 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு

pakistanஇந்தியாவில் உளவு பார்த்த பாகிஸ்தான் நாட்டின் தூதர் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள விசா வழங்கும்பிரிவில் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த மெஹ்மூத் அக்தர் என்பவர் இந்திய பாதுகாப்பு தொடர்பான அதிமுக்கிய ஆவணங்களை சேகரித்து, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக வந்த புகாரினை தொடர்ந்து ரகசிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவின் பேரில் 2 பேர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்தபோது மெஹ்மூத் அக்தர் இந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்தது உறுதி செய்யப்பட்டதால் அவர் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து வெளியேறும்படி மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply