பதான்கோட் விசாரணைக்கு வந்த பாகிஸ்தான் குழுவினர்களுக்கு கருப்பு கொடி காட்டிய காங்கிரஸ்
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படைத் தளத்தில் சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் குழு இன்று இந்தியாவுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த குழுவுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பதான்கோட் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இந்திய – பாகிஸ்தான் அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று, பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பதான்கோட் விமானப் படைத்தளத்தில் பாகிஸ்தான் குழுவினர் நேரில் ஆய்வு நடத்தவுள்ளனர். இதற்காக, விசாரணைக் குழுவினர் பதான்கோட் விமானப்படைத் தளத்துக்கு குண்டுகள் துளைக்காத வாகனங்களில் வந்து சேர்ந்தனர்.
பாகிஸ்தான் விசாரணைக் குழுவினருக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் கருப்புக் கொடி ஏந்தி பாகிஸ்தானுக்கு எதிராக கோஷம் எழுப்பியும் விமானப் படைத் தள வளாகத்துக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக பதான்கோட் விமானப் படைத்தளத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
Chennai Today News: Pak JIT Reaches Pathankot; AAP & Congress Workers Protest