இங்கிலாந்து டெஸ்ட்: மிஸ்பா உல் ஹக் சதத்தால் சரிவில் இருந்து மீண்ட பாகிஸ்தான்

இங்கிலாந்து டெஸ்ட்: மிஸ்பா உல் ஹக் சதத்தால் சரிவில் இருந்து மீண்ட பாகிஸ்தான்

cricketபாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர் நிலைத்து நின்று ஆடாமல் தங்கள் விக்கெட்டுக்களை பறிகொடுத்தாலும், மிஸ்பா உல்-ஹக், ஆசாத் சபீக் ஆகிய இருவரும் நிலைத்து நின்று ஆடி ரன்களை குவித்தனர். ஆசாத் சபீக் 73 ரன்கள் எடுத்தார். மிஸ்பா உல் ஹக் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

முதல் நாள் ஆட்டமுடிவில் பாகிஸ்தான் அணி 87 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 282 ரன்கள் குவித்துள்ளது. இரண்டாவது நாள் ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pakistan 282/7 against England in 1st test cricket

Leave a Reply