மோடி விழாவில் கலந்துகொண்டால் ராணுவ புரட்சி. பாகிஸ்தான் பிரதமருக்கு மிரட்டல்

nawasஇந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ள கூடாது என பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்புக்கு அந்நாட்டு ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். எச்சரிக்கை மீறி விழாவில் கலந்துகொண்டால் பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ புரட்சி ஏற்படும் என அவர் மிரட்டியுள்ளதால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற முறையில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலத்தீவு,பூடான்,ஆப்கானிஸ்தான் ஆகிய ஏழு நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பிதழ் முறைப்படி அனுப்பப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப் இந்தியாவுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்த மோடியின் பதவியேற்பு விழாவுக்கு கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தார். மோடிக்கு அவர் ஏற்கனவே வாழ்த்துக்களும் அனுப்பியிருந்தார்.

நவாஸ் ஷெரிப்பின் இந்த நடவடிக்கை பாகிஸ்தான் ராணுவ தலைமைக்கு எரிச்சலை கிளப்பியுள்ளது. பரமவிரோதி நாடான இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர்  செல்வதை பாகிஸ்தான் ராணுவம் விரும்பவில்லை என்றும், மிறி இந்தியாவுக்கு பிரதமர் சென்றால் பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ புரட்சி ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளதால் நவாஸ் ஷெரிப் தனது பயணத்தை ரத்து செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply