பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்ட தடை நிறுத்தம்

d48c291a-f822-4f7e-8c78-aa34b6648c81_S_secvpf

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் உமர் அக்மல் உள்ளூர் முதல் தர போட்டியில் விளையாடுகையில் கிரிக்கெட் வாரிய விதிமுறைக்கு மாறாக உடையில் லோகோ அணிந்து இருந்ததால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த வாரம் தடை விதித்தது.

இதனால் ஆக்லாந்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் உமர் அக்மல் இடம் பெறமாட்டார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உமர் அக்மல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் அப்பீல் செய்தார்.

இதையடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருக்கிறது. எனவே நாளை நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் உமர் அக்மல் விளையாட முடியும். உமர் அக்மல் அப்பீல் குறித்து பாகிஸ்தான் வாரிய தீர்ப்பாயம் விசாரணை நடத்தி தண்டனையை அறிவிக்கும்.

Leave a Reply