பாகிஸ்தானுக்கு பயத்தை ஏற்படுத்திய மோடியின் இஸ்ரேல் பயணம்

பாகிஸ்தானுக்கு பயத்தை ஏற்படுத்திய மோடியின் இஸ்ரேல் பயணம்

முதன்முதலாக இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த்தை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில் இந்த புதிய உறவை பாகிஸ்தானும் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது.

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் குறித்து பாகிஸ்தான் ஊடகங்களில், வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள், பாதுகாப்பு நிபுணர்கள் உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துகள்
வெளியாகியுள்ளன. இதில் பிற நாட்டுத் தலைவர்களின் பயணத்தில் அதிக கவனம் செலுத்தாத பாகிஸ்தான் அரசு, மோடியின் இஸ்ரேல் பயணத்தை அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறையில் இஸ்ரேலுடனான உறவின் மூலம் இந்தியா அதிக பலன்களைப் பெற்று வருவதாகவும், இது தெற்காசிய பிராந்தியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் அச்சம் கொள்வதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply