பாகிஸ்தான்: இம்ரான்கான் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு உலகக்கோப்பையை பெற்று தந்த கேப்டனும், பாகிஸ்தான் தெக்ரிக் இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் சொத்துக்களை பறிமுதல் செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ்செரீப் பதவி விலக வலியுறுத்தி கடந்த 2014-ம் ஆண்டு எதிர்க்கட்சிகளான இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக் இன்சாப் கட்சியும், மத போதகர் தஹிருல் காத்ரியின் பாகிஸ்தான் அவாமி தெக்ரீக் கட்சியும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்து காவல்துறை அலுவலகம், டிவி நிலையம் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் தெக்ரிக் இன்சாப் மற்றும் பாகிஸ்தான் அவாமி தெக்ரீக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி இம்ரான்கான், காத்ரி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் தொடர்ந்து ஆஜராகவில்லை. அதை தொடர்ந்து இம்ரான்கான் மற்றும் காத்ரியின் சொத்துக்களை பறிமுதல் செய்யும்படி நேற்று கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நடவடிக்கையை உடனடியாக அமல்படுத்தும்படி சம்பந்தப்பட்ட போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க