காஷ்மீர் விடுதலை தியாகி புர்ஹான் வானி. பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

காஷ்மீர் விடுதலை தியாகி புர்ஹான் வானி. பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

pursகாஷ்மீர் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஹிஸ்புல் முஜாகீதின் இயக்கத்தின் கமாண்டர் புர்ஹான் வானி சமீபத்தில் இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஏற்கனவே ஒருசில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய நிலையில் தற்போது புர்ஹான் ‘காஷ்மீர் விடுதலைக்காக உயிரிழந்த தியாகி’ என்று வர்ணித்துள்ளார். அதுமட்டுமின்றி ஜூலை 19ஆம் இதற்காக பாகிஸ்தானில் ‘கருப்பு தினம்’ அனுசரிக்கப்படும் என்றும் அவர் நேற்று அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லாகூரில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் நவாஷ் ஷெரீப், ”காஷ்மீர் மக்கள், சுதந்திரத்துக்காகவும் விடுதலைக்காகவும் போராடி வருகின்றனர். புர்ஹான் வானி காஷ்மீர் விடுதலை போராட்டத்துக்காக போராடி உயிரிழந்துள்ளார். காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஜூலை 19ம் தேதி கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்படும். சுதந்திரத்திற்காக போராடும் உரிமை காஷ்மீர் மக்களுக்கு உண்டு. இந்தியா, காஷ்மீர் மக்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளது. அவர்களுக்கு பாகிஸ்தான் என்றும் ஆதரவு அளிக்கும் ” என்று கூறியுள்ளார்.

நவாஸ் ஷெரீப்பின் இந்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply