பெண் உறுப்பினருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பினாரா இம்ரான்கான்: பாகிஸ்தானில் பரபரப்பு
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் தனது கட்சியின் பெண் உறுப்பினர்களுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அவரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இம்ரான்கான் கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஆயிஷா குலாலாய் எம்.பி அவர்கள் கூறியதாவது: “கட்சியில் பெண்களை மிகவும் மோசமாக நடத்தியதாலேயே இம்ரான் கானின் கட்சியில் இருந்து விலகினேன். இம்ரான் கான் கடந்த மூன்று ஆண்டுகளாக எனக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை அளித்து வருகிறார். வேறு சில உறுப்பினர்களுக்கும் இதுபோன்ற செய்திகளை அனுப்பியிருக்கிறார். தற்போது அவரது தொல்லை பொறுக்க முடியாததாலேயே கட்சியிலிருந்து வெளியேறி உள்ளேன்.
தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. இம்ரான் கானின் நடவடிக்கையை எந்த பெண்ணும் சகித்துக்கொள்ள மாட்டார்கள்” என்று கூறியுள்ளார். மேலும் இவர் விரைவில் நவாஸ் ஷெரிப் கட்சியில் சேரவுள்ளதாகவும் கூறப்படுகிறது