காஷ்மீர் ஹூரியத் மாநாடு அமைப்பின் தலைவர் சையது ஷா கிலானி மூன்று மாதங்களுக்கு பின்னர் ஜம்மு காஷ்மீர் திரும்பியதை அடுத்து பிரிவினைவாத தலைவர் மஸரத் ஆலம் நேற்று நடத்திய பேரணியில் ஒருசிலர் பாகிஸ்தான் கொடியை ஏந்தி சென்றதோடு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். இந்த நிகழ்வால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்ததோடு கடும் நடவடிக்கை எடுக்க காஷ்மீர் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
மத்திய அரசின் உத்தரவு காரணமாக இன்று மஸரத் ஆலம் அதிரடியாக கைது செய்யப்பட்டார். நேற்று நடந்த பேரணியில் பாகிஸ்தான் கொடியை ஏந்தி சென்ற இளைஞரை, மஸரத் ஆலம் ஊக்குவிப்பது வீடியோவில் தெளிவாக உள்ளதால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மஸரத் ஆலம் மற்றும் பிரிவினைவாத தலைவர் கிலானி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் போலீஸார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
காஷ்மீர் பேரணியில் பாகிஸ்தான் கொடியை ஏந்தி சென்ற விவகாரம் குறித்து அனைத்து கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றது.