தர்கா தாக்குதலுக்கு பழிக்கு பழி. பாகிஸ்தானில் 24 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தர்கா தாக்குதலுக்கு பழிக்கு பழி. பாகிஸ்தானில் 24 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தெற்கு பாகிஸ்தானின் ஒரு பகுதியான சிந்து மாகாணத்தில் உள்ளது செவான் நகரில் லால் ஷபாஸ் குவாலண்டர் தர்காவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பலியான அப்பாவிகளின் எண்ணிக்கை 76ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்ற நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் உத்தரவையடுத்து, இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை வேட்டையாட நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன் பலனாக தர்கா தாக்குதலுக்கு பழிக்கு பழியாக கடந்த 24 மணி நேரத்தில் 24 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply